×

(தி.மலை) சகோதரனை சரமாரி வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை ஆரணி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு செலவுக்கு பணம் கொடுக்காததால் ஆத்திரம்

பெரணமல்லூர், ஏப்.26:ஆரணியில் செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த சகோதரனை வெட்டி கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் யோகானந்தம்(39). பன்னீர் செல்வத்தின் சகோதரர் துளசிங்கம் என்பவரின் மகன் பாண்டியன்.மேலும், யோகானந்தம் காட்டன் சூதாட்டம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலை இல்லாமல் சுற்றி வந்த பாண்டியன் யோகானந்தமிடம் அடிக்கடி பணம் வாங்கி செலவு செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி ஆரணி பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள டீக்கடை எதிரே யோகானந்தம் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பாண்டியன் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இனிமேல் உனக்கு பணம் கொடுக்க முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த பாண்டியன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக சகோதரரை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் யோகானந்தம் இறந்தார்.

இது குறித்து ஆரணி போலீஸ் ஸ்டேஷனில் அவரது மனைவி மாலதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு ஆரணி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா அளித்த தீர்ப்பில், யோகானந்தத்தை வெட்டி கொன்ற பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ₹2000 அபராதம் விதித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

The post (தி.மலை) சகோதரனை சரமாரி வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை ஆரணி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு செலவுக்கு பணம் கொடுக்காததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Extra Sessions Court ,Peranamallur ,Arani ,Dinakaran ,
× RELATED (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய...