திருவண்ணாமலை ஏப். 26: திருவண்ணாமலையில் கார் கண்ணாடி உடைத்து லேப்டாப் மற்றும் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிருத்திவிராஜ். இவர் திருவண்ணாமலை கோயிலுக்கு சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது, கிரிவலப் பாதையில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஓட்டலுக்கு சென்றார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காருக்குள் வைத்திருந்த இரண்டு லேப்டாப், ஒரு செல்போன் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் பிரித்திவிராஜ் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் நிறுத்தப்பட்டு இருந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.அப்போது, கார் கண்ணாடியை உடைத்து வாலிபர் ஒருவர் லேப்டாப் மற்றும் செல்போனை திருடி கொண்டு செல்வது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கார் கண்ணாடியை உடைத்து திருடிய திருவண்ணாமலை பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன் (34) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
The post (தி.மலை) கார் கண்ணாடி உடைத்து லேப்டாப் செல்போன் திருட்டு வாலிபர் கைது திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.
