×

பாக். காவல் நிலைய குண்டுவெடிப்பில் 12 போலீசார் உள்பட 17 பேர் பரிதாப பலி

பெஷாவர்: பாகிஸ்தானில் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 போலீசார் உள்பட 17 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் கைபர்பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து 2 முறை குண்டுவெடித்தது.

இதில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 போலீசார், சிறுமி, 4 கைதிகள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், டிஐஜி காலித் சுகெய்ல், “ கவனக்குறைவினால் அல்லது மின்கசிவினால் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம்,” என்று தெரிவித்தார்.

The post பாக். காவல் நிலைய குண்டுவெடிப்பில் 12 போலீசார் உள்பட 17 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Pak ,Peshawar ,Pakistan ,Khyber Pakhtunkhwa ,Dinakaran ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.