×

காஞ்சிபுரத்தில் மே 4ம்தேதி சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்தர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கேது தோஷம் போக்கும் சிறப்புக்குரிய கோயிலாக விளங்கும் சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் திருப்பணிகள் தீவிரமான நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வரும் மே மாதம் 1ம்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக 4ம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜகோபுரத்திற்கு புனிதநீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, மூலவர் சித்ரகுப்த சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது. மாலையில் கண்ணகி அம்பிகைக்கும், சித்ரகுப்தர் சுவாமிக்கும் திருக்கல்யாணமும் இரவு வீதி உலாவும் நடைபெறுகிறது. மறுநாள் 5ம்தேதி அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சித்ரா பௌர்ணமி சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ரகுராமன், கோயில் செயல் அலுவலர் அமுதா ஆகியோர் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் மே 4ம்தேதி சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Chitragupta Temple Kumbabhishekam ,Kanchipuram ,Karnagi ,Ambal Sametha ,Chitragupta ,temple ,Maha ,Kumbabhishekam ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...