×

2022-23-ல் எல்.ஐ.சி.யின் பாலிஸி பிரீமியம் 17% உயர்வு: பாலிஸிதாரர்கள் செலுத்திய பிரீமியம் ரூ.2.32 லட்சம் கோடி

சென்னை: 2022-23 ஆம் ஆண்டு நிதியாண்டில் காப்பீட்டுத்தாரர்கள் செலுத்திய பிரீமியம் 17% அதிகரித்துள்ளதாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது. சென்ற நிதியாண்டில் 2 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு காப்பீட்டுத்தாரர்கள் பிரீமியம் செலுத்தி உள்ளனர். இதுவே முந்தைய நிதியாண்டில் 1 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. பிரீமியம் அடிப்படையில் சந்தையின் மதிப்பு 63.58%-ஆக உள்ளதாகவும் எல்.ஐ.சி. கூறியுள்ளது.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் மார்ச் மாதத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அதிக பிரீமிய தொகையை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக HDFC Life நிறுவனத்தின் சந்தை மதிப்பு 18.83%-ஆகவும், SBI Life நிறுவனத்தின் சந்தை மதிப்பு 16.22%-ஆகவும், ICICI Prudential Life நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12.55%-ஆக இருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

The post 2022-23-ல் எல்.ஐ.சி.யின் பாலிஸி பிரீமியம் 17% உயர்வு: பாலிஸிதாரர்கள் செலுத்திய பிரீமியம் ரூ.2.32 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : LIC ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி...