- நெல்லை
- முருகன்
- சமரசேல்வி
- வன்னிகோனேந்தல்
- மானூர் தாலுகா, நெல்லை மாவட்டம்
- பசுமை மாளிகை திட்டம்
- தின மலர்
![]()
நெல்லை : நெல்லை மாவட்டம், மானூர் தாலுகா, வன்னிக்கோனேந்தலை சேர்ந்த முருகன் மனைவி சமரசச்செல்வி. இவர் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 2019-20ம் ஆண்டு வீடு கட்டி முடித்து மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் இவருக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் பாம்பு தொல்லைகள் அதிகமானது. நேற்று வீட்டுக்குள் பாம்பு புகுந்த நிலையில் பாம்பை அடித்து ஒரு பையில் வைத்துக் கொண்டு, இவரும், இவரது மகளும் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அதிகாரிகள் பாம்பு பையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், வீட்டைச் சுற்றிலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. எனவே வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காததை கண்டித்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டை ஒப்படைக்க உள்ளேன் என கூறியுள்ளார்.
The post மின் இணைப்புக்காக பாம்புடன் வந்த பெண் appeared first on Dinakaran.

