×

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வேதனையில் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உரிய விலை கிடைக்காத விரக்தியில் விவசாயி ஒருவர், தக்காளியை ஆற்றில் கொட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வரத்து அதிகரிப்பால், ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், செலவு செய்த பணம் கூட கைக்குக் கிடைக்காததால் தக்காளிகளை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டு ஆடு, மாடுகளுக்கு உணவாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பதிமடுகு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர், சாகுபடி செய்த 3 டன் தக்காளியைக் கிருஷ்ணகிரி சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு சென்றுள்ளார். அங்கு தக்காளியை விற்க முடியாமல் வேதனையில் இருந்த அவர், மார்க்கண்டேயன் நதியில் தக்காளியைக் கொட்டிச்சென்றுள்ளார்.

 

The post கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வேதனையில் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி appeared first on Dinakaran.

Tags : Vepanappalli, Krishnagiri district ,Krishnagiri ,Vepanapalli, Krishnagiri district ,Krishnagiri District ,Vepanapalli ,
× RELATED முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு...