×

கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்கள், பயணிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கேரளாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (ஏப்ரல் 24) கொச்சி வந்தார்.

ஐ.என்.எஸ் கருடா கடற்படை விமான நிலையத்தில் இருந்து இளைஞர்கள் மாநாடு நடைபெறும் இடம் வரையிலான பாதையின் இருபுறமும் இருந்த மக்களை நோக்கி கேரள பாரம்பரிய உடையில் பிரதமர் நரேந்திர மோடி கை அசைத்தார். பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு மேல் கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கினார். அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருந்தது.

இந்தியா முழுவதும் சுமார் 14 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. இதன் 15ஆவது சேவையாக திருவனந்தபுரம்-காசர்கோடு வரை இயக்கப்படுகிறது. மேலும், இந்த வந்தே பாரத் ரயில்கள் ரயில் 18 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே 586 கி.மீ. தூரத்தை ரயில் கடக்கும். இதன் வழியே நிறைய நீர் நிலைகள், தென்னை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தாண்டி செல்லும்.

சுமார் 586 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 6 நிறுத்தங்களில் ரயில் நிற்கும். அவை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரு்சூர், ஷோரனூர் ஜங்ஷன், கோழிக்கோடு, கண்ணனூர், காசர்கோடு ஆகியவை ஆகும். திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூர் செல்ல இந்த ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

The post கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Vande ,Bharat ,Thiruvananthapuram ,Kasargod ,Kerala ,Vande Bharat train ,Kasaragod ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...