×

ரிக்‌ஷா ஓட்டுனருக்கு சரமாரி வெட்டு: போலீசார் விசாரணை

 

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (24). இவர் சவுகார்பேட்டையில் உள்ள மெடிக்கல் குடோனில் ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவியும், பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்றுமுன் தினம் இரவு மாதவன் தனது வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்குப் புறப்பட்டபோது, அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளது. இரவு 11 மணியளவில் தலையில் வெட்டுக் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்த மாதவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் மாதவன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாதவனை எதற்காக மர்ம கும்பல் வெட்டியது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரிக்‌ஷா ஓட்டுனருக்கு சரமாரி வெட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rickshaw ,Perambur ,Madhavan ,Pulianthoppu KP Park ,Chaukarpet ,Dinakaran ,
× RELATED மாதவன் போற்றும் மச்சபுரி