×

ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு: புளிய மரம் உலுக்குவதில் தகராறு அண்ணன் கட்டையால் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு

 

ஜெயங்கொண்டம்: புளிய மரம் உலுக்குவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் கட்டையால் தாக்கியதில் தம்பி பரிதாபமாக உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் இவர்களுக்கு ராமச்சந்திரன், மணிமேகலை, ராஜேந்திரன், சுசிலா, சங்கர் என மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவரும் கூளி தொழிலாளர்கள். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில் சங்கர்(47) இரண்டு முறை திருமணம் செய்து, இரு மனைவிகளும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டனர். சங்கருக்கு குழந்தை ஏதுமில்லை. இந்நிலையில் சங்கருக்கும், அண்ணன் ராஜேந்திரன்(53) என்பவருக்கும் இடத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சங்கருக்கு சொந்தமான இடத்தில் உள்ள புளியமரத்தில் ராஜேந்திரன் குடும்பத்தினர் நேற்று முன்தினம் புளி உலுக்கியுள்ளனர். இதனால் சங்கர் மற்றும் ராஜேந்திரன் இருவருக்குமிடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சங்கரை கட்டையால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு: புளிய மரம் உலுக்குவதில் தகராறு அண்ணன் கட்டையால் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,JAYANGONTAM ,Ariyalur District ,Jayangontum ,Dinakaran ,
× RELATED டெங்கு காய்ச்சல் தடுப்பு...