×

புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை

 

ஊட்டி, ஏப்.25: புதிரை வண்ணார் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு பல்வேறு உதவித்தொகை வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிரை வண்ணார் சமூகத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் ராஜகோபால் நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் 250க்கும் மேற்பட்ட புதிரை வண்ணார் குடும்பத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மிகவும் பின் தங்கியுள்ள எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு தமிழக அரசு நல வாரியம் மூலம் விபத்து காப்பீடு வழங்க வேண்டும். இயற்கை மரணம் அடைந்தால் அதற்கான ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

கல்வி, திருமண உதவித்தொகை மற்றும் மகப்பேறு உதவித் தொகை வழங்க வேண்டும். மேலும், முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா, மூக்குக் கண்ணாடி உதவித்தொகை, இலவச வீடு ஆகியவைகள் வழங்க வேண்டும். அனைத்து மக்களுக்கு சலவை இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், லாண்டரி கடைகள், சமுதாய கூடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சலவை செய்ய ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு, புதிரை வண்ணார் சமூகத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் ராஜகோபால் கூறியுள்ளார்

The post புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Putrai Vannar ,Ooty ,Nilgiri ,Puthirai ,Vannar ,
× RELATED ஊட்டி மலை ரயில் ரத்து