×

மாண்டஸ் புயலால் படகுகளை இழந்த 124 மீனவர்களுக்கு ரூ.4.67 கோடி நிவாரண நிதி: அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை: சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் படகுகளை இழந்த 124 மீனவர்களுக்கு ரூ.4.67 கோடி நிவாரண நிதியை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். மாண்டஸ் புயலில் முழுவதுமாக சேதமடைந்த 76 விசைப்படகுகள், 6 நாட்டுப்படகுகள் மற்றும் பகுதியாக சேதமடைந்த 136 விசைப்படகுகள், 31 நாட்டுப்படகுகள், 2 இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி வலைகள் என 124 மீனவர்களுக்கு ரூ.4.67 கோடியினை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான ஆணையினை, நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘‘கடந்த டிசம்பர் மாதம் மாண்டஸ் புயலில் கடலோரத்தில் நிறுத்தியிருந்த படகுகள் சேதமடைந்தன. இதை அறிந்த முதல்வர், உடனடியாக காசிமேடு பகுதிக்கு வந்து சேதத்தை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிச் சென்றார். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு எந்த அரசும் செய்யாத அளவில் 4 மாதங்களில் நிவாரணத் தொகை வழங்கிய அரசு திமுக அரசுதான்’’ என்றார்.

The post மாண்டஸ் புயலால் படகுகளை இழந்த 124 மீனவர்களுக்கு ரூ.4.67 கோடி நிவாரண நிதி: அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Cyclone Mandus ,Chennai ,Ministers ,Mandus ,
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு