×

பிரபல ரவுடி வெள்ளை சுந்தரிடம் ஜெர்மன் பிஸ்டல் பறிமுதல்

நெல்லை: நெல்லை டவுனை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை சுந்தர், உறவினர் அஜய்கோபிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த வழக்கில் டெல்லியில் கைதானார். நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 19ம்தேதி முதல் 21ம் தேதி வரை வெள்ளை சுந்தரிடம் நெல்லை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நெல்லை சந்திப்பு அருகே பாலபாக்யா நகரிலுள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெர்மன் மாடல் கைத்துப்பாக்கியும் (பிஸ்டல்), 6 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி வக்கீல் ஒருவருக்கு சொந்தமானது என்று வெள்ளை சுந்தர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட வக்கீலிடம் விசாரித்தபோது, சிறிய பழுதை நீக்கி தருமாறு வெள்ளை சுந்தரிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

The post பிரபல ரவுடி வெள்ளை சுந்தரிடம் ஜெர்மன் பிஸ்டல் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Roudy White Sunder ,Roudi White Sunder ,Nelly Town ,Ajaigobi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3...