×

மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.44.62 லட்சம்

குன்றத்தூர்: மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூ.44.62 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

கோயில் வளாகத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 44 லட்சத்து 62 ஆயிரத்து 18 ரூபாயும், 435 கிராம் தங்கம் மற்றும் 1860 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உண்டியல் திறப்பின்போது கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், கோயில் துணை ஆணையர் கவெனிதா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். உண்டியலில் காணிக்கை என்னும் பணி நடந்தபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

The post மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.44.62 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Mangadu ,
× RELATED மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை...