×

சொர்க்கத்திற்கு அழைத்த போதகர் பட்டினி கிடந்து உயிரை விட்ட 47 பேர்: தோண்ட தோண்ட சடலங்கள்; 800 ஏக்கர் வனப்பகுதிக்கு சீல்

 

நைரோபி: கென்யாவில் சொர்க்கம் போவதற்காக பட்டினி இருந்து 47 பேர் உயிரை விட்ட சோகம் தெரிய வந்து உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து போலீசார் உடனடியாக சபவ பகுதிக்கு சென்று உள்ளனர். இதில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட 47 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி மக்களிடம் கூறியுள்ளார். அவர்களும் அதனை உண்மை என நம்பி சொர்க்கத்திற்கு செல்ல பட்டினியாக கிடந்து உள்ளனர். அவர்களில் 47 பேர் உயிரிழந்து விட்டனர். எலும்பும் தோலுமாக இருந்த 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர். இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்து உள்ளனர். இதுபற்றிய தொடர்பான விசாரணையில் பால் மெக்கன்சி சாப்பிடவோ அல்லது குடிக்கவோ மறுத்து விட்டார். இந்த சம்பவம் கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச கிறிஸ்தவ ஆலயம் இருந்த 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது.

The post சொர்க்கத்திற்கு அழைத்த போதகர் பட்டினி கிடந்து உயிரை விட்ட 47 பேர்: தோண்ட தோண்ட சடலங்கள்; 800 ஏக்கர் வனப்பகுதிக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Nairobi ,Kenya.… ,Dinakaran ,
× RELATED கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி