×
Saravana Stores

இலங்கைக்கு எதிராக அயர்லாந்து ரன் குவிப்பு: பால்பிர்னி 95 ரன் விளாசினார்

காலே: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், அயர்லாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட் செய்தது. ஜேம்ஸ் மெக்கல்லம், பீட்டர் மூர் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். மூர் 5 ரன், மெக்கல்லம் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஹாரி டெக்டர் 18 ரன் எடுத்து வெளியேறினார்.இந்த நிலையில், பால்பிர்னி – ஸ்டர்லிங் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 115 ரன் சேர்த்தது. ஸ்டர்லிங் 74 ரன் எடுத்த நிலையில் (133 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். பால்பிர்னி 95 ரன் (163 பந்து, 14 பவுண்டரி) விளாசி ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சில் தனஞ்ஜெயா வசம் பிடிபட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில், அயர்லாந்து 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்துள்ளது. டக்கர் 78 ரன், கர்டிஸ் கேம்பர் 27 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

The post இலங்கைக்கு எதிராக அயர்லாந்து ரன் குவிப்பு: பால்பிர்னி 95 ரன் விளாசினார் appeared first on Dinakaran.

Tags : Ireland ,Sri Lanka ,Palbirnie ,Galle ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை