×

குரோம்பேட்டை பகுதியில் பைக் திருட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் சிக்கினர்

தாம்பரம்: குரோம்பேட்டை பகுதியில் பைக் திருட்டு மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பிடிபட்டனர். குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், குரோம்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விலை உயர்ந்த 2 பைக்கில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், குரோம்பேட்டை துர்கா நகர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் எனவும், இவர்கள், கேரளாவில் இருந்து சிகிச்சைக்கு வந்த ஆமெக் மற்றும் குரோம்பேட்டை பாலாஜி மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்காக வந்த நவீன் ஆகிய 2 பேரின் பைக்குகளை திருடியது தெரியவந்தது. மேலும், திருடிய பைக்கின் மூலம், இந்த 3 சிறுவர்களும் ஜிஎஸ்டி சாலையில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் சிறுவர்கள் ஏற்கனவே திருடி வைத்திருந்த 1 பைக் என 3 பைக் மற்றும் 8 கிராம் தங்கச்செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, 3 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

The post குரோம்பேட்டை பகுதியில் பைக் திருட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Krombettai ,Krombettai Police Station ,Dinakaran ,
× RELATED குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர்...