×

நட்பு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

புதுடெல்லி: புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில்12.7  லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாலத்தீவுகள், பூட்டான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நட்பு நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு அமெரிக்கா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பல லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக மாலத்தீவுகள், பூட்டான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் வர்த்தக ரீதியாகவும் பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் இப்பணியைப் பாராட்டுகிறோம்’ என்று தெரிவித்துள்ளது….

The post நட்பு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Corona ,United States ,India ,New Delhi ,Covisfield ,Hyderabad ,Bharat Biotech ,Pune ,USA ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!