×

அட்சய திரிதியை நாளில் நடைபெற்ற சில நிகழ்வுகள்

 

நன்றி குங்குமம் ஆன்மிகம்

 

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் பரசுராமர் மகனாக அவதரித்த நாள்.

* சிவபெருமான் தன்னை வணங்கும் பக்தர்கள் பசியைப் போக்குவதற்காக அன்னபூரணி தேவியிடம் உணவு பெற்றுக் கொடுத்தார்.

* சூரிய பகவான் கைகளால் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரத்தை திரௌபதி பெற்றுக் கொண்டாள்.

* இந்த உலகத்தில் முதன் முதலாக தெய்வ யக்ஞங்களும், பரிகார ஹோமங்களும் இன்றுதான் தொடங்கப்பட்டன.

* மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மை, சுந்ரேஸ்வரர் சுவாமியைத் திருமணம் செய்துகொண்டார்.

* படைப்புக் கடவுளான பிரம்ம தேவன், உலகத்தைப் படைத்தது இந்த நாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.

* அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை நோயுற்றவர்கள் அருகில் அமர்ந்தபடி தண்ணீரை வைத்து ஜபம் செய்து, விபூதி இட்டுக் கொடுத்தால் அதன் வீர்யமும், தாக்கமும் குறைந்து உடல் நலம் தேறும். இந்த மந்திரம் தொடங்கப்பட்டதும் இந்நாளில்தான்.

* ஒரு காலத்தில், பூமியில் நீர் வறண்டு பஞ்சம் ஏற்பட்டபோது வானுலகத்திலிருந்து பகீரத மன்னன், கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தார். கிருதயுகம் என்று புனித ஆன்மாக்களும், தவசீலர்களும் அவதரித்த காலம் தொடங்கியநாள்.

* மகாபாரதக் கதையை விநாயகப் பெருமானுக்கு வியாச மகரிஷி இந்த நாளில் சொல்லத் தொடங்கினார்.

* உத்திரப் பிரதேசம் பீகார் மாநிலத்தவர்கள் அட்சய திரிதியை சுபநாளில், பொன் மணியாகிய நெல் மணியை பூமியில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

* இந்த நாளில், ஒரிசா மாநிலத்து மக்கள், பகவானை வழிபட்டு தாகத்துக்கு நீர் கொடுக்கும் கிணறு தோண்டும் பணியைச் செய்கின்றனர்.

* தான்யங்களை பெருக்குகிற தான்யலட்சுமி அவதாரமும், பொருள்பலம் கூடச் செய்யும் ஐஸ்வர்யலட்சுமி அவதாரமும் இந்தச் சுபநாளில் உருவானதாகப் புராணச் செய்திகள் கூறுகின்றன.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post அட்சய திரிதியை நாளில் நடைபெற்ற சில நிகழ்வுகள் appeared first on Dinakaran.

Tags : Akshaya Trithiya ,Parasurama ,Sage Jamathkani ,Renuka Devi ,
× RELATED அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்க...