×

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,904 பேருக்கு பாதிப்பு உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் நேற்று 10,112 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 6,904 ஆக பாதிப்பு குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,91,989லிருந்து 4,48,98,893 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்னும் ஓயந்தபாடில்லை. சமீபத்தில் சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் மீண்டும் சில நாடுகளில் தொற்று பரவி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 948 பேருக்கு தொற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 67,806லிருந்து 65,683 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 16 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,329லிருந்து 5,31,345 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 9,833 கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று 9,011 பேர் வீடு திரும்பினர்.

The post மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,904 பேருக்கு பாதிப்பு உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Union Health Department ,Delhi ,Dinakaran ,
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...