×

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

சேந்தமங்கலம்: எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி மண்கரடு பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் ராம் செல்வன்(18), நாமக்கல் அரசினர் கலை கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை, தனது நண்பர்களுடன் கெஜக்கோம்பையில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர். அப்போது, தண்ணீரில் மூழ்கினார். அதனைக் கண்டு திடுக்கிட்ட நண்பர்கள் கதறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், நிலைய வீரர்கள் விரைந்து சென்று, சுமார் 1 மணி நேரம் போராடி ராம்செல்வனை சடலமாக மீட்டனர். தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிணற்றில் மூழ்கி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Bodhinayakanpatti Mankaradu ,Erumapatti ,Ram Selvan ,Namakkal ,
× RELATED காய்ந்த மரங்களை அகற்ற வலியுறுத்தல்