×

மயிலாடுதுறை வதானேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வதானேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் குரு அனுக்ரஹ தலமான வதான்யேஸ்வரர் கோயிலில் செப்டம்பர் மாதத்தில் 10ம் தேதியும், கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் 3ம்தேதியும் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக குருபெயர்ச்சி விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் அறிவிப்பு வெளியிட்டார்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனக் கோயிலான வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது. குரு அனுக்ரஹ தலமான இக்கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. குருபெயர்ச்சியின் போது குருபகவான்  மேதா தட்சிணாமூர்த்தி தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். இவ்விழாவில் பங்கேற்ற தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறும்போது, குரு பகவான் ஆலய கும்பாபிஷேகம் வருகிற செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதேபோல் செப்டம்பர் மாதம் 3ம் தேதி அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்றார்.

The post மயிலாடுதுறை வதானேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Guru ,Mayiladuthurai ,Vathaneswarar Temple ,Mayiladuthurai Wataneswarar Temple ,Swami ,
× RELATED வியாழக்கிழமை விரதம் இருந்து வணங்க வேண்டிய தெய்வம்