×

விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகப்பாடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் 6ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாலக்கோடு, தர்மபுரி, கம்பைநல்Aலூர் தக்காளி சந்தைக்கு சராசரி 100 டன் தக்காளி விற்பனைக்கு வரும். கேரளா, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரில் வந்து தக்காளி வாங்கி செல்வர். தற்போது சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தக்காளி அறுவடை செய்யப்படுவதால், அங்குள்ள வியாபாரிகள் தர்மபுரிக்கு வந்து வாங்குவது குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை அனைத்து இடங்களிலும் சரிந்துள்ளது.

The post விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Paparapatti ,Palakodu ,Marandaalli ,Karimangalam ,Irumathur ,Campinallur ,Bennagaram ,Athakkapadi ,Morapur ,Dinakaran ,
× RELATED 7 மாதத்திற்கு பிறகு தர்மபுரியில் இடியுடன் கூடிய சாரல் மழை