×

லாட்டரி விற்ற இருவர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம்

 

ஈரோடு, ஏப். 24: லாட்டரி விற்பனையைத் தடுக்க போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு, அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார், நசியனூர் ரோடு பகுதியில் நேற்று முன் தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டீ கடை ஒன்றில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கிருந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இருப்பினும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில், அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு, மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் (30), கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 71 மற்றும் எண்கள் எழுதப்பட்டிருந்த வெள்ளைத்தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரைத் தேடி வருகின்றனர்.

The post லாட்டரி விற்ற இருவர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு