×

வேலை வாய்ப்பு அதிகமுள்ள கல்வி குறித்து ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் திண்டுக்கல்லில் ஏப்.26ல் நடக்கிறது

 

திண்டுக்கல், ஏப். 24: திண்டுக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டுதல் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்துடன் வழிகாட்டுதல் முகாம் நடைபெற உள்ளது.

இதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டுதல் முகாம் தன்னார்வ இயக்கம் மூலம் வேர்களை விழுதுகளாக்குதல் என்ற பெயரில் ஏப்.26ம் தேதி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திலும், மே 2ம் தேதி நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லுாரியிலும் நடக்கிறது. காலை 10 மணி முதல் பகல் 1.30 வரை நடைபெற உள்ள இந்த முகாம்களில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அவற்றை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்

The post வேலை வாய்ப்பு அதிகமுள்ள கல்வி குறித்து ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் திண்டுக்கல்லில் ஏப்.26ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Atidra Students ,Didikull ,Dindukal ,Aditravidar ,Dintugul district 11 ,Thindigul ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை...