×

வெள்ளியணை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீரை அகற்ற வேண்டும்

கரூர்: தொடர் கோடை மழை காரணமாக வெள்ளியணை அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர். கரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக உப்பிடமங்கலம், வெள்ளியணை , புலியூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது . இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெள்ளியணைப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனை முன்வார மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தி சரி செய்தனர்.

இந்நிலையில் வெள்ளியணையில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளியணை மற்றும் சுற்றுப்புற குக்கிராமங்களில் மழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, வெள்ளியணை அரசு மருத்துவமனையில் சுமார் ஒரு அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் இதனால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்களும் மருத்துவமனை டாக்டர்கள் ஊழியர்கள் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் தேங்கி கிடக்கும் மழை நீரை அருகில் உள்ள வாய்க்காலில் குழாய் மூலம் நீரை வெளியேற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெள்ளியணை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீரை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Veliyani Government Hospital ,Karur ,Vellianai Government Hospital ,Dinakaran ,
× RELATED கரூர்- மூக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை