மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் நட்சத்திரம் கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் (24 வயது, 5வது ரேங்க்) நேற்று மோதிய அல்கரஸ் (19 வயது, 2வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் சிட்சிபாசின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அல்கரஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 18 நிமிடத்துக்கு நீடித்தது.
The post பார்சிலோனா ஓபன்: அல்கரஸ் அசத்தல் appeared first on Dinakaran.