×

ரகானே 71*, கான்வே 56, துபே 50: ரகானே 71*, கான்வே 56, துபே 50

 

கொல்கத்தா: நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது. ருதுராஜ் கெயிக்வாட், டெவன் கான்வே இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 73 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

ருதுராஜ் 35 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சுயாஷ் ஷர்மா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கான்வே 56 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வருண் சுழலில் வீஸ் வசம் பிடிபட்டார். அடுத்து அஜிங்க்யா ரகானே – ஷிவம் துபே இணைந்து நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்ய, சிஎஸ்கே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ரகானே 24 பந்தில் அரை சதம் அடிக்க, துபே 20 பந்தில் அரை சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். துபே 50 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 18 ரன் (8 பந்து, 2 சிக்சர்) விளாசி கெஜ்ரோலியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்தது.

ரகானே 71 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் எம்.எஸ்.தோனி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் கெஜ்ரோலியா 2, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. நாராயன் ஜெகதீசன், சுனில் நரைன் இணைந்து துரத்தலை தொடங்கினர். நரைன் டக் அவுட்டாகி வெளியேற, ஜெகதீசன் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். கொல்கத்தா 1 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.

The post ரகானே 71*, கான்வே 56, துபே 50: ரகானே 71*, கான்வே 56, துபே 50 appeared first on Dinakaran.

Tags : Ragane ,Conway ,56 ,Dube ,Kolkata ,Chennai Super Kings ,IPL league ,Knight Riders… ,Dinakaran ,
× RELATED 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை...