×

3 நக்சல்கள் சத்தீஸ்கரில் கைது

நாராயண்பூர்: நாராயண்பூர் மாவட்டம் பஹ்கர் பெர்மாபால் கிராமங்களிடையேவுள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 7,9 ஆகிய தேதிகள் நடந்த இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜல்மிஷியா மாவோயிஸ்ட் அமைப்பின் உறுப்பினர்களான சங்கர் டரோ, சீதாராம் சோரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஒரு கட்டுமான தொழிலாளியை கொன்று, வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்திலும் தொடர்புடையவர்கள். மேலும், ஜல்மிஷியா அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்த சந்தீப் கோர்ரம் என்ற நக்சல் தீவிரவாதியும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவர் மீதும், கொலை, வெடிகுண்டு தாக்குதல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

The post 3 நக்சல்கள் சத்தீஸ்கரில் கைது appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Narayanpur ,Bahgar Permabal ,naxals ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த...