×

கொருக்குப்பேட்டையில் ரவுடி இறுதிச்சடங்கில் தகராறு; முகத்தில் கல்லால் அடித்து கூலி தொழிலாளி படுகொலை: வாலிபர் சிறையிலடைப்பு

தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டை ஆரணிரங்கன் தெருவை சேர்ந்தவர் கமல் என்ற கமலக்கண்ணன் (36) இவர், நேற்று இரவு டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த திருவொற்றியூரை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜசேகர் (42) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து வந்து ராஜசேகர் முகத்தில் அடித்துள்ளார்ளார். இதில் பலத்த காயமடைந்து ராஜசேகர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து பயந்துபோன கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்தும் கொருக்குப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜசேகரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி கருப்பு குமார் 6 பேர் கும்பலால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக வந்தபோது, மதுபோதையில் கமலக்கண்ணனுக்கும், ராஜசேகருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கமலக்கண்ணன், 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி கருப்பு குமாரின் மைத்துனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கமலக்கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கொருக்குப்பேட்டையில் ரவுடி இறுதிச்சடங்கில் தகராறு; முகத்தில் கல்லால் அடித்து கூலி தொழிலாளி படுகொலை: வாலிபர் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Korukipet ,Kamalakkannan ,Kamalakannan ,Chennai ,Korkuppet Aranirangan street ,Tasmak ,Korukipetta ,
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...