×

மழை வேண்டி பிரான்மலை கண்மாயில் மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி: மழை வேண்டி சிங்கம்புணரி அருகே பிரான்மலை கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று மீன்களை அள்ளிச் சென்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் விநாயகர் கண்மாய் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் பாசனத்தை நம்பி 300க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்கள் பாசன வசதி பெறுகின்றன. நெல் அறுவடை பணிகள் முடிவடைந்து கோடை காலம் துவங்கிய நிலையில், கண்மாயில் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் ஆண்டுதோறும் இந்த கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில் நேற்று மீன்பிடித் திருவிழா நடந்தது. பிரான்மலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காலையிலேயே கண்மாய் முன்பு குவிந்தனர். காலை 7.30 மணியளவில் அதிர்வேட்டுடன் மீன்பிடி திருவிழா தொடங்கியது. சிறியவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கச்சா, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனைகளைக் கொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் இதில் அதிக எண்ணிக்கையில் விரால், கட்லா, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post மழை வேண்டி பிரான்மலை கண்மாயில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Pranamalai Kanmaail Fishing Festival ,Singampunari ,Branmalai Kanmai ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...