×

15 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

தர்மபுரி : தர்மபுரி சந்தைப்பேட்டை, குமாரசாமிபேட்டை, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் 3 கடைகளில் 15 கிலோ அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரசாயனம் ஊற்றி அழித்தனர். மேலும், அதனை விற்பனை செய்த 3 கடை உரிமையாளர்களுக்கு, ₹2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதையடுத்து, அழுகிய கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது. சுகாதாரமான முறையில் மீன்கள் விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

The post 15 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Kumaraswamypet ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்