×

மயிலாடுதுறையில் 29ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் வரும் 29 (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மயிலாடுதுறை அலகு இணைந்து மயிலாடுதுறையில் உள்ள தியாகி.ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாமில் மயிலாடுதுறை உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் இம்முகாமில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ பட்டதாரிகள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி. அயல்நாட்டு வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவ சான்று உட்பட உரிய சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறவும்,மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது கய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்தார்.

 

The post மயிலாடுதுறையில் 29ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Tyagi Narayanasamy Municipal High School ,
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...