×

மயிலாடுதுறை நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தூய்மைப் பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட,அறுபத்து மூவர் பேட்டை, பட்டமங்கலம் புது தெரு, வள்ளலார் வடக்கு வீதி ஆகிய இடங்களில் தூய்மைப் பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் கலெக்டர் தெரிவித்ததாவது:

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அறுபத்து மூவர் பேட்டையில் அமைந்துள்ள தட்டான் குளத்தில் நடைபெற்று வரும் படித்துறை அமைக்கும் பணியினையும். தொடர்ந்து, பட்டமங்கலம் புது தெரு  நகர் காலனியில் அமைந்துள்ள வண்ணான் குளத்தில் நடைபெற்று வரும் படித்துறை அமைக்கும் பணியினையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், துரிதமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வள்ளலார் வடக்கு வீதியில் வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும், பட்டமங்கலம் புதுத் தெருவில் வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு கிடைக்கும் குப்பைகளை உடனடியாக ஆற்ற சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார். இதில்நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி உடன் இருந்தார்.

 

The post மயிலாடுதுறை நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai Municipality ,Mayaladuthurai ,Mahabarati ,Mayiladududurai ,Municipality ,Mayiladudura Municipality ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி