×

சில்லி பாயின்ட்…

* இளம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு (15-18 வயது, 18-24 வயது) இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட், பளுதூக்குதலுக்கு வீரர்கள் மட்டும், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், தடகளம், நீச்சலுக்கு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை எப்சிஐ பொது மேலாளர் (விளையாட்டு) ஷைனி வில்சன் தெரிவித்துள்ளார். மேலும் தகவலறிய, விண்ணப்பிக்க: www.fci.gov.in

* துருக்கியில் நடைபெறும் உலக வில்வித்தை தொடரின் மகளிர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் நேற்று தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக, ஓஜஸ் தியோதாலேவுடன் இணைந்து காம்பவுண்ட் கலப்பு குழு பிரிவிலும் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

* மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் 1 வீரர் ஜோகோவிச் காயம் காரணமாக விலகியுள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Food Corporation of India ,FCI ,
× RELATED உ.பி.யில் காவலர் தேர்வுக்கான விடைக்...