×

கொரோனா உயிர்பலியை குறைத்த இட்லி, சாம்பார்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இட்லி, சாம்பார் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, பிரேசில், ஜோர்டான், சுவிட்சர்லாந்து மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல் ரிசர்வ் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா தொற்றின் போது இறப்புகளைத் தடுப்பதில் தென் இந்தியாவின் பிரபலமான இட்லி-சாம்பார் மற்றும் வடஇந்தியாவின் ராஜ்மா-அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வகை உணவில் அதிக அளவு இரும்பு, ஜிங்க் மற்றும் நார்ச்சத்து இருப்பதாகவும், இந்தியர்கள் அடிக்கடி தேநீர் அருந்துவதாலும், உணவில் மஞ்சளை சேர்ப்பதாலும் கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். மக்கள் தொகை குறைவான மேற்கத்திய நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக இருப்பதற்கு இந்தியர்களின் உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருந்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

The post கொரோனா உயிர்பலியை குறைத்த இட்லி, சாம்பார்: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Idli ,New Delhi ,India ,Brazil ,Jordan ,Italy ,Sambar ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...