×

ககன்யான் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!!

பெங்களூர் : ககன்யான் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ” இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் 2 சிங்கப்பூர் செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆதித்யா, சந்திராயன் – 3 போன்ற முக்கிய திட்டங்களை ஓரிரு மாதங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வரும் ஜூன் மாதத்தில் 12 அல்லது 14 கிமீ உயரத்தில் ராக்கெட்டுகளை அனுப்பி சோதிக்கும் பணிகள் நடைபெறும். மேலும் ராக்கெட்டுகளை ஹெலிகாப்டர்கள் மூலம் விழச் செய்து சோதனை மேற்கொள்ளப்படும்.2024ம் ஆண்டு பிப்ரவரியில் ககன்யான் முழு சோதனை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே ஆதித்யா ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ராக்கெட் அடுத்தகட்டமாக செலுத்தப்படும்.மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு வரச் செய்வதற்கான ஏவுகலன் தொடர்பான ஆராய்ச்சியும் நடக்கிறது.

The post ககன்யான் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somnath ,Bangalore ,Dinakaran ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...