×

சிங்கப்பூரின் டெலியோஸ்-02 செயற்கைக்கோளை சுமந்தபடி பிற்பகல் 2.20 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 55 ராக்கெட்..!!

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி 55 ராக்கெட் சிங்கப்பூரின் டெலியோஸ்-02 செயற்கைக்கோளை சுமந்தபடி பிற்பகல் 2.20 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வணிக நோக்குடன் வர்த்தக ரீதியாகவும், வெளிநாடுகளின் செயற்கைக்கோளையும் விண்ணில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி 55 ராக்கெட் சிங்கப்பூரின் டெலியோஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து பிற்பகல் 2.20 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது பிஎஸ்எல்வி-யின் 57-வது ராக்கெட் ஆகும். இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கு பயன்படக்கூடியது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராக்கெட் ஏவப்படுவதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

The post சிங்கப்பூரின் டெலியோஸ்-02 செயற்கைக்கோளை சுமந்தபடி பிற்பகல் 2.20 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 55 ராக்கெட்..!! appeared first on Dinakaran.

Tags : Singapore ,Srihrikota ,ISRO ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி