×

கீழக்கரையில் சமூக நல்லிணக்க திருவிழா இன்று துவங்குகிறது

 

கீழக்கரை, ஏப்.22: புனித ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு கீழக்கரையில் சமூக நல்லிணக்க திருவிழா இன்று துவங்குகிறது. இது தொடர்பாக கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் நிர்வாக சபை தலைவர் ரத்தின முஹமது. உதவி தலைவர் அப்துல் ஹமீத் செல்ல வாப்பா ஆகியோர் கூறியதாவது, கீழக்கரை வடக்கு தெரு மணல்மேட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் சமூக நல்லிணக்க ஒன்று கூடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இக்கொண்டாட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் பள்ளி, கல்லூரிகளில் படித்த அனைத்து சமுதாய பெண்கள் தங்கள் தோழிகளை சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்து மகிழ்வது வழக்கம். நடப்பாண்டு ரம்ஜான் பண்டிகை கால கொண்டாட்டத்தை நடத்த வடக்குத்தெரு ஜமாத் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது.

இதன்படி இன்று (ஏப்.22) முதல் 25 ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 10:30 வரை ரம்ஜான் பண்டிகை விழா நடைபெறவுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஆண்கள், பெண்கள் என தனித்தனி பாதை அமைக்கப்பட்டுள்ளன. கீழக்கரையில் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடல் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வந்து செல்வோரின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் படி மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’என்றனர்

 

The post கீழக்கரையில் சமூக நல்லிணக்க திருவிழா இன்று துவங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Community harmony festival ,Keejakarai ,Geezakarai ,Community harmony ,Keezakarai ,Ramzan festival ,
× RELATED கீழக்கரை கடலில் 150 கிலோ அரிய வகை ஆமை கரை ஒதுங்கியது