×

வந்தவாசி நகரில் 800 ஏழைகளுக்கு பிரியாணி பொருட்கள் டிஎஸ்பி வழங்கினார்

 

வந்தவாசி, ஏப்.22: வந்தவாசி நகரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 800 ஏழைகளுக்கு பிரியாணி தயாரிப்பதற்கான அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை டிஎஸ்பி கார்த்திக் வழங்கினார்.
வந்தவாசி நகர தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழை இஸ்லாமியர்களுக்கு பிரியாணி தயாரிப்பதற்கான அரிசி, எண்ணெய், மளிகை பொருட்கள் இறைச்சி ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை மக்கா மசூதி அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.நசீர் அகமது தலைமை தாங்கினார்.

தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் டி.அப்துல் ஹமீத், நகரச் செயலாளர் முகமது ரஃபி, நகர துணை செயலாளர் தாரிக், சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டிஎஸ்பி கார்த்திக் கலந்து கொண்டு 800 ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர தொண்டரணி செயலாளர் வசீம், நகர பொருளாளர் ரபி, நிர்வாகிகள்
சதாம், யாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post வந்தவாசி நகரில் 800 ஏழைகளுக்கு பிரியாணி பொருட்கள் டிஎஸ்பி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : DSP ,Vandavasi Nagar ,Vandavasi ,Ramzan festival ,Dinakaran ,
× RELATED ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு