×

ஒன்றிய அரசு தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் சாருஸ்ரீ தகவல்

 

திருவாரூர், ஏப். 22: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஒன்றிய அரசால் எஸ்.எஸ்.சி& சி.ஜி.எல் எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் கிராஜுவெட் லெவல் பதவிக்கு 7 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு கல்வித்தகுதி இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வரும் 01.08.2023ம் நாளன்று 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி அல்லது எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முறையில், கணினி அடிப்படையிலான தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். தேர்வுகள் வரும் 14.07.2023 முதல் 27.07.2023 வரை நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம்தேதி கடைசி நாளாகும். இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணையதள முகவரி https://ssc.nic.in என்பதாகும். இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அடுத்த மாதம் (மே) 2ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசு தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் சாருஸ்ரீ தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Sarusree ,Tiruvarur ,Tiruvarur District ,Collector ,Union Government ,SSC ,
× RELATED பிஎஸ்என்எல் நிறுவன இடங்களை ஒன்றிய...