×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு: ரூ.50 லட்சத்திற்கு விற்பனை

 

பெரம்பலூர்: ரம்ஜான் பண்டிகையின் போதும் சிறுவாச்சூர் ஆட்டுச் சந்தை க்கு ஆடுகள் வரத்து குறைவாக இருந்தது. இருப்பினும் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.ரூ.50லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. ரம்ஜான் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர் களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இதற்காக நடப்பாண்டு மார்ச் 24ம்தேதி தொடங்கி இஸ்லாமியர்கள் நோன்பி ருந்து தொழுகைகள் நடத் தி இன்று (22ம்தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டா டப்பட உள்ளது.இதனிடையே பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தை நேற்று(21ம்தேதி) அதிகா லை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பஸ்நி றுத்தம் கிழக்கேயுள்ள வெட்ட வெளித் திடலில் வழக் கம் போல் நடைபெற்றது.

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் படும் நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை, ஆடுகள் வரத்து குறைவாக இருந்தும், விற்பனை விறுவிறுப் பாகவே நடைபெற்றது. சா தாரண ஆட்டு சந்தைக்கே சிறுவாச்சூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வரும் நிலையில், மற்ற ஊர்களில் செவ்வாய், புதன், வியாழக் கிழமைக ளில் நடத்தப்படும் ஆட்டுச் சந்தைகளும் ரம்ஜானைக் குறிவைத்து நேற்று நடத்த ப்பட்டதால், சிறுவாச்சூருக்கு 500க்கு குறைவான ஆடு களே வந்திருந்தன.

இதனை ஏலமெடுக்கக் கு றைவான வியாபாரிகளே வந்திருந்தனர். ஆடு கிலோ 800க்கு விற்கப்படுகிற நி லையில் குறைந்தப் பட்சம் ரூ10ஆயிரம் முதல் அதிகப் பட்சம் ரூ20ஆயிரம் வரை விலைவைத்து பேரம் பேச ப்பட்டது. பெரம்பலூர் மாவ ட்டம் மட்டுமன்றி சேலம் மாவட்டம் தலைவாசல், கெ ங்கவல்லி, தெடாவூர், வீரக னூர், திருச்சி மாவட்டம் து றையூர் மற்றும் அரியலூர், கடலூர் மாவட்டம் திட் டக்கு டி, தொழுதூர் பகுதிகளில் இருந்தும் ஆட்டு வியாபாரி கள் ஆடுகளை விலைக்கு வாங்கிச்சென்றனர்.நேற்று ஆடுகளை வாங்க ஆட்கள் இருந்தும், வரத்து குறைவு காரணமாக ரூ40 முதல் ரூ 50 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு: ரூ.50 லட்சத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ramzan festival ,Siruvachur ,Perambalur ,Siruvachur goat market ,eve ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.