×

அப்போலோ சர்க்கஸ் துவக்கம்

 

நாகப்பட்டினம்,ஏப்.22: நாகப்பட்டினம் திருவாரூர் மெயின் ரோடு, புத்தூர் ஆர்ச் அருகில் சிஎஸ்ஐ மைதானத்தில் அப்போலோ சர்க்கஸ் துவங்கியது. தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், நாகை மாவட்ட திமுக செயலாளருமான கவுதடன் தலைமையேற்று, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். விழாவில், நாகை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிக்கல் என்.ஆனந்த், நாகை நகர் மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாஸ்கரன், அந்தனப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் லட்சுமி வேலாயுதம், ராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போலோ சர்க்கஸ் சாகசங்கள் பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாபு கூறும்போது, சர்க்கஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சாகச காட்சிகள் தான். ஏதோ மாயாஜாலத்தால் நடைபெறவில்லை.

முழுக்க முழுக்க ‘லைவ் ஷோ’வாக ரசிகர்கள் முன்னிலையில் சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது உயிரை துச்சமென நினைத்து திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். அப்போலோ சர்க்கஸ் நாகையில் கோடைகால பொழுதுபோக்கு முதல் முதலாக துவங்கி பொதுமக்களை மகிழ்வித்து வருகிறது. திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி மூன்று காட்சிகளாக தொடங்கி நடைபெறுகிறது. தொடக்கத்தில் 50 அடி உயரத்தில் அந்தரத்தில் உள்ள பார் கம்பிகளில் சர்க்கஸ் கலைஞர்கள் தாவி தாவி விளையாடுவதும், தாவியபடி ஒருவர் கைகளை இன்னொருவர் பிடித்து தொங்குவதும், ஒருபுறமிருந்து மறுபுறம் அந்தரத்தில் பாய்வதும் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசகாட்சி நிகழ்த்துகிறார்கள்.

பார்வையாளர்களை பரவசப்படுத்தும் தித்திக்காட்சியாக ஒரு பக்கம் இருந்தாலும், காய்கறிகளை நெற்றியில் வைத்து கத்தியால் வெட்டுவது, வயிற்றில் வைத்து மண்வெட்டியால் வெட்டுவது, மண்ணெனையை வாயில் ஊற்றிக்கொண்டு தீ சுவாலைகளை பறக்க விடுவது உள்ளிட்ட காட்சிகள் எல்லாம் திக்…திக்…வென இருக்கையின் நுனிக்கே வரவைத்து விடுகின்றன. இப்படியெல்லாம் 80 ஆண் கலைஞர்கள், 40 பெண் கலைஞர்களுடன் ஒரு மாதம் நாகையில் சர்க்கஸ் நடைபெறும். டிக்கெட் கட்டணம் ரூபாய் 200, 150, 100 என சர்க்கஸ் அரங்கில் வழங்கப்படுகிறது என்றார்.

The post அப்போலோ சர்க்கஸ் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Apollo Circus ,Nagapattinam ,CSI ,Puttur Arch ,Tiruvarur Main Road ,Tamilnadu… ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...