×

உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை இன்று தொடக்கம்: முதல்வர் புஷ்கர் தாமி பக்தர்களை வரவேற்றார்

ரிஷிகேஷ்: உத்தராண்ட்டின் 4 புனித தலங்களை தரிசிப்பதற்கான சார்தாம் யாத்திரை இன்று தொடங்குகிறது. உத்தரகாண்ட்டின் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு இந்து பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரை சார்தாம் யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சார்தாம் யாத்திரை இன்று தொடங்குகிறது. இதையொட்டி, ரிஷிகேஷில் இருந்து சார்தாம் யாத்திரை செல்வதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி பங்கேற்று யாத்திரீகர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

மேலும் பக்தர்கள், மற்றும் யாத்திரை பஸ்களின் ஓட்டுநர்கள் மற்றும் கன்டக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அவர் வழங்கினார். பின்னர் யாத்திரை செல்லும் பஸ்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ‘‘இந்த ஆண்டு சார்தாம் யாத்திரை, முந்தைய ஆண்டுகளின் சாதனைகளை முறியடிக்கும் என நம்புகிறோம். பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. இதற்காக யாத்திரை தொடர்பான ஏற்பாடுகள் ஒவ்வொரு மட்டத்திலும் தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிக்கப்படுகிறது. யாத்திரை முடிந்து வீடு திரும்பும் ஒவ்வொரு பக்தர்களும் புனித பூமியான உத்தரகாண்ட்டில் கழித்த பொன்னான நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் முயற்சியின் நோக்கம்’’ என்றார்.

The post உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை இன்று தொடக்கம்: முதல்வர் புஷ்கர் தாமி பக்தர்களை வரவேற்றார் appeared first on Dinakaran.

Tags : Sardham pilgrimage ,Utharagand ,Chief Minister ,Pushkar Tami ,Rishikesh ,Uttarand ,Uttarakandt ,Yamunotri ,Gangotri ,Kedarnath ,Sardham ,Uttarakhand ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...