×

அத்திவாக்கம் ஊராட்சியில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

பெரியபாளையம்: அத்திவாக்கம் ஊராட்சியில் நியாய விலை கடை பழுதடைந்துள்ளதால் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே அத்திவாக்கம் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் சுமார் 410 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்நிலையில் ஊராட்சி கட்டிடம் அருகே 2013 -14 ஆண்டில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அப்போது நியாய விலைக்கடை கட்டப்பட்டு செயல்பட்டுவந்தது.

இந்நிலையில் 29 ஆண்டுகள் ஆன நிலையில் கட்டிடமானது மிகவும் பழுதடைந்து மேற்கூரை கான்கிரீட் பூசுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்தபடி ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே கசிவதால் கடைக்குள் மழைநீர் தேங்கி, அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் நனைந்து வீணாகி வந்தது. இந்த கட்டிடத்திற்குள் சென்று பொருட்கள் வாங்க அப்பகுதி மக்கள் அச்சப்படுவதால் நியாய விலை கடையை மாற்றி தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனவே தற்காலிகமாக ஊராட்சியில் உள்ள கிராம இ-சேவை மைய கட்டிடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது.

இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில், அத்திவாக்கம் ஊராட்சியில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாய விலைக்கடை மிகவும் பழுதடைந்து சிமெண்ட் கான்கிரீட் பூசுகள் உதிர்ந்து எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் கடையை மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்து அடுத்து கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக கடை இயங்கி வருவதாகவும் இரண்டு நிர்வாகம் ஒரே கட்டிடத்திற்குள் இயங்கி வருவதால் கடையை சரிவர திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்து மனு அளித்தும் எவ்வித பயனில்லை எனவே, அதிகாரிகள், பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அத்திவாக்கம் ஊராட்சியில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Athivakkam panchayat ,Periyapalayam ,Atthivakkam panchayat ,
× RELATED பெரியபாளையம் அருகே சிவன், பார்வதி,...