×

உடைந்த நாற்காலியை பயன்படுத்தி ஓய்வூதியம் பெற 7 கி.மீ நடந்து சென்ற மூதாட்டி

நப்ராங்பூர்: ஓய்வூதியம் பெறுவதற்காக வங்கியை நோக்கி நடையாய் நடந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட அவலம் குறித்து, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் நப்ராங்பூர் மாவட்டம் ஜாரிகான் பகுதியில் 70 வயது மூதாட்டி சூர்ய ஹரிஜான் என்பவர் வசித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும், மாநில அரசின் மாதாந்திர ஓய்வூதிய பணத்தை பெற்று வந்த இவரின் கைரேகை பதிவுகள் மறைந்ததால், தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகம் அவரது ஓய்வூதிய ெதாகையை நிறுத்தியது.

அதனால் வங்கி நிர்வாகத்தை அணுகுவதற்காக கோடை வெயிலில் கால்நடையாக வெறுங்காலுடன் நடந்து சென்றார். மேலும் அவர் உடைந்த நாற்காலியை பயன்படுத்தி சாலையோரமாக 7 கிலோமீட்டர் நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த மூதாட்டியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

The post உடைந்த நாற்காலியை பயன்படுத்தி ஓய்வூதியம் பெற 7 கி.மீ நடந்து சென்ற மூதாட்டி appeared first on Dinakaran.

Tags : Nabrangpur ,Union Minister ,Nirmala Sitharaman ,Nadayai ,Dinakaran ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...