×

90 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி; 21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான இளம்பெண்: உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்!!!

தென்காசி : தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருகலா என்பவர் வெற்றி பெற்றார். இவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.மேலும் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  பெற்று கொண்டார்.அதே போல, திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்களை டெப்பாசிட்டை இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார். …

The post 90 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி; 21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான இளம்பெண்: உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்!!! appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,President ,Mudhati ,Tenkasi ,Kanchipuram ,Chengalpattu ,Vellore ,Ranipet ,Tirupathur ,Villupuram ,Kallakurichi ,Tirunelveli ,Tamil Nadu ,panchayat ,council ,Moothathi ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்