×

கோவை குனியமுத்தூரில் ஜாக் அமைப்பு சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை; ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு..!!

கோவை: கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் அமைப்பு சார்பில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கோவையில் உள்ள இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் அமைப்பினர் கொண்டாடினர்.

ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை சனிக்கிழமை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவை குனியமுத்தூரில் ஜாக் அமைப்பு சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை; ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ramadan ,JACK ,Kuniyamuthur ,Coimbatore ,Jaq Organization ,Muslims ,Ayesha Mahal ,
× RELATED அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மோடி சந்திப்பு