×

சரிவை காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.35,552க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 35,552 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான தங்கம் விலை திடீரென 35 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. பின்னர் படிப்படியாக உயர்வை கண்டு 35 ஆயிரத்திற்கு மேல் அதிகரிக்க தொடங்கியது. இந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. இடைப்பட்ட காலத்தில் குறைய தொடங்கியிருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் ஓரளவுக்கு உயர்வை கண்டது. இதனால் வாடிக்கையாளர்கள் துயரத்துக்கு ஆளாகினர். ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் தங்கம் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 24 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,444 ரூபாய்க்கும், ஒரு சவரன் 35,552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் 8 கிராம் 38,464 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 65 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ 65,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். …

The post சரிவை காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.35,552க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் – மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு