×

சேரங்கோடு பகுதியில் ரூ.4.85 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி

 

பந்தலூர்,ஏப்.21: பந்தலூர் அருகே கொளப்பள்ளி அண்ணாநகர் முதல் சேரங்கோடு பஜார் வரையுள்ள தார்சாலை அமைக்கும் பணியினை எம்பி ராசா துவக்கி வைத்தார்.பந்தலூர் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கழக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா பந்தலூர் மேற்கு ஒன்றியம்கொளப்பள்ளி அண்ணா நகர் முதல் சேரங்கோடு பஜார் வரை செல்லும் தார்சாலை பணியினை துவக்கி வைத்தார். நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தார்சாலை பணி துவக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் முபாரக்,மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா,கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ்,நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், நீலகிரி மாவட்ட பார் கவுன்சில் தலைவர் சந்திரபோஸ்,முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, ஒன்றிய துணை செயலாளர் குழந்தைவேல், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் செந்தில் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சேரங்கோடு பகுதியில் ரூ.4.85 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Darshal ,Cherangode ,Bandalur ,Kolapalli Annanagar ,Serangodu Bazar ,Rasa ,
× RELATED பந்தலூரில் சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்கான இடம் ஆய்வு